தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறியும்... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தோர் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராகவும்.. பிரதமர் மோடியின் பேச்சைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் இருந்த பேரணியாக சென்ற இவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளரை நேரில் சந்தித்து பிரதமர் மோடிக்கு எதிராக புகார் அளித்தனர்*
*முன்னதாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி*
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாத நரேந்திர மோடி நான்கு நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தானில் பேசும்போது.... காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் வீடு சொத்து பணம் வெள்ளி தங்கம் எல்லாவற்றையும் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள், தாய்மார்களின் கழுத்தில் இருக்கும் தாலியை கூட அறுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று பேசி இருக்கிறார்.
மோடிக்கு இது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது இது மாதிரியான மத வெறியை தூண்டுகின்ற வகையில் வழக்கமாக பேசுபவர்தான்.
விடுதலைப் போராட்ட காலத்தில் பல்வேறு போராட்டங்களை செய்திருக்கிறோம் சிறைக்கு செல்வது தூக்கு மேடைக்கு செல்வது போன்ற பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறோம்.. இதில் எதிலும் பங்கேற்காத ஆங்கிலேயர்களோடு கூடிக் குலாவிய கூட்டத்தின் வாரிசு நரேந்திர மோடி என்கின்ற காரணத்தினால் நாட்டின் ஒற்றுமை பற்றி அவருக்கு கவலை கிடையாது.
மோத விட்டு ரத்தம் குடிக்கிற ஏற்பாடு செய்யும் வேலையாக இருக்கிறது
எனவே தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் கிடையாது... எனவே உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி ஆளக்கூடாது மட்டுமல்ல பேசவே கூடாது என்ற ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும் .