மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய நம் கழக கூட்டணி சார்பாக நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணன் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து நாகை அவுரித்திடலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தோம்.
விவசாயிகளை - மீனவர்களை வஞ்சித்து கார்ப்பரேட்டுகளை கைதூக்கி விடும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்திட, எல்லோருக்குமான இந்தியாவை மீட்டெடுக்க ஆதரிப்பீர் 'கதிர் அரிவாள்' சின்னம் என்று நாகை மக்களைக் கேட்டுக் கொண்டோம்.