தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாகவும் - ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
அம்பாசமுத்திரம், வி.கே.புரம் சாலையில், அம்பை ராணி பள்ளி பக்கத்தில் இருக்கும் இரயில்வே கேட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தூண்டில் வளைவு இல்லாத கிராமங்களுக்கு, தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய நவீன தொழில்நுட்பம் கொண்ட பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி தொகுதியில் களம் காணும் 'இந்தியா' கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் திரு.விஜய் வசந்த், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிற திரு.இராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு பெருவாரியான வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.