Breaking News :

Sunday, July 20
.

சுதந்திர தின பாடல் பதிவு


படம் : பாரதவிலாஸ்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
பாடகர்கள் : பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன்,
ஏ. எல். ராகவன், கே. வீரமணி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துளுக்கர் என் தோழர்…
ஹா….ஆ….ஆ….
ஆண் : அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
அர் ரஹ்மானிர் ரஹீம்…
ஆண் : திசை தொழும் துளுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
பெண் : எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
குழு : ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்
பெண் : கங்கை பாயும் வங்கம் தென்னில்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல்தென்னை வளரும் கேரளம்
ஆண் : ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இருவர் : இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
குழு : ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம்
ஆண் : இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ ஹோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
ஆண் : ஸ்ரீ சைலம் திருப்பதி க்ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
சல் மோகன ரங்கா பாடுங்கோ
பெண் : ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
பெண் : பிருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு சுவாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி…
ஏனு சுவாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
ஆண் : படச்சோன் படச்சோன் எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹு அல்லா
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிச்சூர் ஜில்லா
பெண் : தேக்குத் தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க
ஆண் : தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
இருவர் : படச்சோன் படச்சோன் எங்களை படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹு அல்லா
அல்லாஹு அல்லா அல்லாஹு அல்லா
ஆண் : சுனோ சுனோ பாய் சுனோ சுனோ
மே பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ
ம் யாஹு தேக்கோ தேக்கோ
பெண் : ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ ம் ஆவோ ஆவோ
ம் ஆவோஆவோ ஆவோஆவோ
ஆவோஆவோ ஆவோஆவோ
ஆவோ ஆவோஆவோ
ஆண் : பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
இருவர் : பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ யாஹூ யுஆஹு யாஹூ யாஹூ
யுஆஹு யாஹூ யாஹூ யுஆஹு யாஹூ யாஹூ
ஆண் : எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
ஆண் குழு : எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
பெண் குழு : பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்
ஆண் குழு : பேசிப் பழகும் கிள்ளைகள்
ஆண் : சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்
அனைவரும் : வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்…
.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.