Breaking News :

Friday, April 19
.

வண்ணாரப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா


வண்ணாரப்பேட்டை பகுதியில்  சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 96 கிலோ கஞ்சா கைப்பற்றிய, H-1 வண்ணாரப்பேட்டை காவல்  குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். 

Commissioner of Police commended H-1 Washermenpet  PS Police team for arresting 4 persons who possessing ganja in Washermenpet area. 96 kgs of Ganja were recovered from them.

H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விஜய், முதல்நிலைக்காவலர்கள் திரு.முருகேஸ்வரன் (மு.நி.கா.35802), திரு.சதாசிவம் (மு.நி.கா.31592), காவலர்கள் திரு.முகமது காட்டுபாவா (கா.51278), திரு.முகமது அசாருதீன் (கா.56880), திரு.நல்லதம்பி (கா.49679) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த  தகவலின் பேரில், கடந்த 03.01.2022 அன்று, மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து, அங்கு  சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1) மங்கராஜ் (வ/32) ஆந்திர மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

 காவல் குழுவினர் விசாரணையில், மங்கராஜ் ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையைச் சேர்ந்த மேற்படி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், சம்பவத்தன்று மேலும் சிலருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த போது, காவல் குழுவினரிடம் சிக்கியது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் 2) சரண்ராஜ் (எ) சரண்குமார் (வ/24) காசிமேடு 3) நொண்டிலட்சுமி (வ/60) காசிமேடு 4) கவிதா (வ/25) திருவொற்றியூர் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 96 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

காவல் பணியில், சிறப்பாக செயல்பட்டு, குற்ற எதிரிகளை கைது செய்த, H-1 வண்ணாரப்பேட்டை காவல்  குழுவினரை,  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 08.01.2022 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
 

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.