Breaking News :

Friday, April 19
.

T.P.சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா


T.P.சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து, 7 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய K-6 T.P சத்திரம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். 

Greater Chennai Police Commissioner commended K-6 T.P Chatram Police team for arresting 4 accused for possessing ganja at T.P. Chatram area. 7 kgs of Ganja were recovered from them.  

சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, K-6 T.P சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.E.ராஜேஸ்வரி தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.N.ராதாகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் திரு.G.இளையராஜா (த.கா.24633), திரு.P.சரவணன் (த.கா.26945) மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.S.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர்  கடந்த 06.10.2021 அன்று காலை ஷெனாய் நகர், கல்லறைச்சாலை அருகே கண்காணித்த போது, அங்கு கஞ்சா மறைத்து வைத்திருந்த 1.எழில் (எ) ஏழிலரசன், வ/48, எம்.ஜி.ஆர் நகர், 2.ஈஸ்வரன், வ/61, தேனிமாவட்டம் 3.மாரிமுத்து, வ/48,  அண்ணா நகர், 4.ரவி, வ/57, கெருகம்பாக்கம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,அவர்கள் 11.10.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Greater Chennai, Commissioner of Police Tr. Shankar Jiwal, IPS, has ordered to take stringent action on ganja, gutkha, liquor sellers through the special action of “DAD - Drive Against Drugs” in Chennai City.

Following this, on 06.10.2021, on a tip off, a team led by Tmt. E. Rajeswari, Inspector of Police, K-6 T.P Chatram PS, Sub Inspector of Police Tr. Radhakrishnan, Head Constable Tr. G. Ilayaraja (HC 24633), Tr. P. Saravanan (HC 26945) conducted surveillance near Cemetery road, Shenoy Nagar and arrested 1)Ehil @ Ezhilarasan (M/48) of MGR Nagar, 2) Eeswaran (M/61) of Theni District 3) Marimuthu (M/48) of Anna Nagar,4) Ravi, (M/57) of Gerugambakkam for possessing ganja illegally. 7 kgs ganja was recovered from them. Legal action was pursued against them.

On 11.10.2021, the Commissioner of Police Tr. Shankar Jiwal IPS, personally invited the K-6 T.P Chatram PS Police team and lauded their work by presenting them with certificate of appreciation and reward. 

#chennaicitypolice 
#greaterchennaipolice
#chennaipolice


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.