Breaking News :

Sunday, April 21
.

ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடம்


ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி அதன்பின் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 122 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 117 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 111 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.