அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயலால் இதுவரை 60 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இதனால் நியூயார்க் முதல் லூசியானா மாகாணங்கள் வரையிலான பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயல் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். வானிலை மேலும் மோசமடையும் என கூறப்படுகிறது.