இன்னைக்கு கோடி கோடியா சம்பாரிச்சு தர பிசினெஸ் இது. உங்களால நம்ப முடியுதா ?
உலகத்துலயே அதிகம் முடி ஏற்றுமதி பண்ற நாடுகளில் இந்தியா முதலிடமும், இரண்டாவது சீனாவாம். இந்திய முடிகளை வாங்க உலக சந்தைல நெறைய போட்டியிருக்க்காம்.
திருப்பதி கோவில், பழனி கோவில் இங்கதான் சுத்தமான மற்றும் தரமான முடிகள் கிடைக்கிறதாம். சுத்தமான முடினா நீங்க நினைக்கிற ஷைனிங் ஆனா பலப்பலனு இருக்குற முடி இல்ல. ஷாம்பு கலக்காத இயற்கை வளர்ந்த முடிகளாம்.
வருஷத்துக்கு 40மில்லியன் பேர் திருப்பதி போறாங்க அதுல 25% பேரு முடியை காணிக்கையா தருவாங்க.
2014 நிலவரப்படி திருப்பதி கோவில் முடியை ஏலம் விட்ட தொகை $12 மில்லியன் அதாவது இந்திய கணக்குப்படி 86 கோடியாம். 2020ல் நீங்களே கணக்கு போட்டுக்கங்க எவ்வளவு கோடி வரும்னு. 200 கோடியை தாண்டிருக்காம்.
இப்போதைக்கு தரம் பிரித்த கிலோ முடிகள் ரூபாய் 50000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுல நீளம் அதிகமா இருந்தா ரொம்ப காஸ்ட்லியாம். அதனால பெண்கள் தலைமுடிக்கு மவுசு ஜாஸ்தி.
பெண்கள், ஆண்கள் தலைமுடி விக்கு செய்யவும் யூஸ் பண்றங்களாம்.
விக்குல ரெண்டு வகையான ஒன்னு உண்மையான முடி,
இன்னொன்னு சிந்தடிக் முடி - செயற்கை.
வெளிநாட்ல எல்லாரும் விரும்புறது உண்மையான முடில செஞ்ச விக்கு'தான், இந்திய விலைப்படி 30000 இருந்து 75000 வரை விக்கிறாங்க..
12' 14' 16' 18' 20' இந்த சைஸ்ல வெளிவருது அதற்கேற்ற விலையும் கூட.
இதுக்காகவே சந்தைல பெரிய நிறுவனங்கள் இருக்கு அதாவது பிராண்டட்.
அதிகம் விற்பனை ஆகும் நாடுகள் கனடா மற்றும் மெக்ஸிகோ, ஐரோப்பா ஆப்ரிக்கா நாடுகளாம்.
முடி திருத்தும் கடைகள் வெட்டுனா முடிய அந்த ஏரியா ஏஜென்ட் கிட்ட கொடுப்பாங்களாம். கொஞ்சம்கொஞ்சமா ஒரு ஏரியாவிலிருந்து ஒரு சிட்டி ஹப்கு போகுமாம்.
அப்பறம் மெயின் ஹப் ..
இப்புடி எல்லாம் ஒன்னு சேர்த்து கடைசியா தரம் பிரிப்பாங்க..
நோய் உள்ள முடி,
சுத்தமான முடி,
நீளமான, குட்டையான முடின்னு கம்பெனிக்கு ஏற்றுமதியாகும்.