சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும் என நான் பேசியது ஒரு தமிழனாக என்னுடைய ஆதங்கம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடியில் பேட்டி. நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் ஆகியும் வெளிநாடுகளில் உள்ளது போன்ற வானிலை தொழில்நுட்ப வசதிகளை இங்கு ஏன் கொண்டுவர முடியவில்லை. மற்ற நாடுகளில் வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்கும் நிலையில் இங்கு மட்டும் பொத்தாம் பொதுவாக கனமழை, அதி கனமழை என வானிலை ஆய்வு மையம் கணித்து சொல்வது ஏன்?
தமிழ்நாடு முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்தி இருக்க வேண்டும். அரசின் மீட்பு பணிகள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். எதிர்காலத்தை திட்டமிட்டு வெள்ளத்தடுப்பு திட்டங்களை செயலாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்..