Breaking News :

Saturday, January 18
.

கோல்டன் விசா பெற்றார் நடிகை கோமல்சர்மா


தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமானவர நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பரோஸ்’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. பொழுதுபோக்கு துறையில் இவரது திறமை, அர்ப்பணிப்பு, பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கோல்டன் விசா கோமல் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற நிகழ்வில் இந்த கோல்டன் விசா வழங்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எக் டிஜிட்டல் ( ECH Digital) நிறுவனத்தின் சிஇஓ திரு. இக்பால் மார்கோனி இந்த கோல்டன் விசாவை கோமல் சர்மாவிடம் வழங்கினார்.  

தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, அருண்விஜய், பார்த்திபன், திரிஷா, அமலாபால், நஸ்ரியா, ராய்லட்சுமி உள்ளிட்ட வெகு சில நட்சத்திரங்கள் மட்டுமே இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ள நிலையில் தற்போது நடிகை கோமல் சர்மாவுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 

கோல்டன் விசா பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கோமல் சர்மா கூறுகையில், “இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் வெகு சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த இந்த கோல்டன் விசாவை தற்போது எனக்கு வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு மிகப்பெரிய நன்றி.

 

 

தமிழ்நாட்டை போல இனி துபாயும் எனது இன்னொரு வீடு என்று பெருமையாக சொல்லலாம். இதுபோன்ற கவுரவத்தால் எனது பொறுப்புகள் இன்னும் அதிகமாகவதாக உணர்கிறேன். இது இன்னும் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உந்து சக்தியாக அமையும். இதன்மூலம் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.. 

 

துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இதன்படி பத்து வருட காலம் இந்த விசா செல்லுபடியாகும்.

 

அதன்பின் தானாகவே அடுத்த பத்து வருடத்திற்கு அவை புதுப்பிக்கப்படும்.. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த சில மனிதர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றது ஐக்கிய அரபு அமீரக அரசு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.