Breaking News :

Sunday, October 06
.

பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி


பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார். அதன் பின்பு உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் அனைத்து பணிகளும் தமிழகத்தில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது அரசியல் செய்ய வேண்டும் என பேசுகிறார்கள் 100 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 16 பேரில் 11 நபர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் தொடர்ந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது முதற்கட்டமாக 11 உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளோம் கால்நடைகள் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.பத்து நாட்களாக அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் பணி செய்கிறார்கள் தற்போது அரசியல் வேண்டாம்

குளம் தூர் வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதுதமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் காரணமாக பேசுகிறார்.வரலாறு காணாத நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்ன பணிகள் நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் மக்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொள்வார்கள்.மலை கிராமமான மாஞ்சோலைக்கு பேருந்து போக்குவரத்து துவங்காத நிலையில் மக்கள் இலவசமாக வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள.பேரிடர் இல்லை என கூறிய நிதி அமைச்சர் பேரிடர் பாதிப்புகளை பார்வையிட நாளை தூத்துக்குடி வருகிறார் முறையாக பார்வையிட்டு தகுந்த ஆய்வு செய்து நிதி வழங்குவார் என நம்புகிறோம்.பாரதப் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமை குறித்து பேசி உள்ளார் முதலமைச்சரும் நிலைமையை எடுத்துக்கூறி கூடுதல் நிதி கோரி உள்ளார்.பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாளை தூத்துக்குடி வரக்கூடிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து  தகுந்த நிதி தருவார் என நினைக்கிறோம் என்று தெரிவித்தார் அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு தேவா வேலு மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும் உடன் இருந்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.