சமீபகாலமாக என் Facebook கணக்கில் பெண்கள் ரிக்வெஸ்ட் அதிகம் வர ஆரம்பிச்சது.
அவர்களின் Profile ஆராய்ந்து Accept கொடுக்கலாம் என்று பார்த்தால், அவர்களின் கணக்கை பூட்டி வைத்திருகரகிறார்கள். சரி என்று Accept செய்துவிட்டேன். (ஒரு பெண் நம்மல மதிச்சி ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கே என்ற நல்ல எண்ணத்தில் தான் அக்செப்ட் பண்ணேன்.
சிறிது நேரத்தில்…
என் இன்பாக்சில் (inbox), hi i am Sheela from coimbatore னு வந்த்து. என்னடா இது இப்பதா அக்செப் பண்ணோம் அதுக்குள்ள msg-ha… ஒரு வேல இந்தியா வல்லரசு ஆயிடிச்சோ-னு யோசிச்சிக்கிட்டே "Hi" போட்டேன்…
You like video call sex chat. Just Rs.300 only-nu வந்தது. நான் பிளாக் பண்ணிட்டேன். (நீ அவ்ளோ நல்லவனாடா-னு நினைக்கறது தெரியுது. ஏன்னு சொல்றேன்.)
என் நண்பன் கத்தார் நாட்டில் வேலை செய்கிறான். அவனுக்கு முகம் தெரியாத பெண்ணிடம் இருந்து வந்த ரிக்வெஸ்ட் அக்சப் பண்ண பிறகு வீடியோகாலில் வந்து இருக்கு. ரூமில் தனியாக இருந்த அவனும் ஜொள்ளுவிட்டு பார்க்க, அவள் ஒவ்வோரு டிரஸ்-ஸாக கழட்ட சொல்லி இருக்கு. அவளும் கழட்டி இருக்கிறாள். இவனும் கழட்டி நிர்வானமாக, அவள் சொல்வதை எல்லாம் காம மயக்கத்தில் செய்து இருக்கிறான்.
இனிதே திரைப்படம் முடிந்திருக்கிறது. பையன் திருப்தியா பேஸ்புக் நோண்டிட்டு இருக்கும் போது, அந்த பெண் ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறாள். அதில் இவனும் அந்த பெண்ணும் நிர்வாணமாக செய்யும் செயல்கள் பதிவாகி இருக்கு.
50,000 ரூபாய் தரவில்லை என்றால், உன் account-la இருக்கும் அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டி இருக்கிறாள். பிறகு எனக்கு போன் செய்தான். அழுது துடிக்கிறான். அவள் Account block பண்ணிட்டு கொஞ்ச நானைக்கு facebook use பண்ணாத. உன்னோட account close பண்ணிடுறது நல்லதுனு சொன்னேன்.
இப்போது இப்படி எல்லாம் பணம் பறிக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்பு வடநாட்டுகாரிகள் தான் இந்த வேலையை பார்த்தார்கள். இப்போது தமிழ்நாட்டுகாரிகளும் இந்த வேலைய பார்க்கிறார்கள். அதுவும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களை டார்கெட் செய்து இந்த மோசடி அதிகம் நடக்கிறது.
வெளிநாடோ, உள்நாடோ ஆண்களே உஷாராக இருங்கள். தெரியாத வீடியோ கால்களை அட்டெண்ட் பண்ணாதிங்க…வாட்சப்-ல கூட இது நடக்கிறது. உஷார்!