உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்தியா வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருபவரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும், ‛எக்ஸ்' வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க், வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.