கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களும் இந்த முறையில் பணம் ஈட்டுகின்றனர்.
தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஈரோடு நாமக்கல் கோவை மாவட்டங்களில் கருமுட்டை வியாபாரம் படுசூடாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் டெஸ்ட் டீயூப் பேபி மருத்துவமனைகளே.
இந்த மருத்துவமனைகளுக்கு என்று புரோக்கர்கள் ஆண்களும் பெண்களுமாய் உண்டு.
ஒரு பெண் தனது கருமுட்டையை தருவதற்கு ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கிடைக்கின்றது அதிகபட்சம் 10 நாள் வேலை
தரகர்களுக்கு கமிசன் வேறு.
சில நேரம் பெண்களுக்கு நீடித்த ரத்தபோக்கு மாதிரியான உடல் பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு.
ஆரம்பத்தில் குடும்ப கஷ்டத்திற்காக வரும் பெண்கள் நாளடைவில் விருப்பப்பட்டு வருமானத்திற்காக செய்கின்றனர்.
சில பெண்கள் ஒருபடி மேலேறி அதே புரோக்கர்கள் மூலமாக விபச்சாரத்திலும் தள்ள படுகின்றனர்.
மனதில்லாமல் குடும்ப நலனிற்காக செய்ய துணியும் செயல்கள் நாளடைவில் வருமானத்திற்காக தொடர்கிறது.
அதுவே பழகிடும் என்ற வார்த்தைதான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
பெண்களின் மீதான சுமைகள் குறித்து சிந்தித்தால் பாவமே என்று தோன்றுகிறது.
பாவம் பெண்பிறப்பு.
பெண்ணே நீ பெண் என்பதாலே இத்தனை கொடுமைகளா
கொடுமைக்கு கொள்ளி வைத்திடும் காலம் என்று வருமோ.