மிக் ஜாம் புயலின் காரணமாக தொடர் கனமழையால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கியது குறித்து ஆங்காங்கேநடைபெறும் நலத்திட்ட உதவிகளை திமுக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது
இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி பகுதியில் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்
புயலின் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் நிவாரண பணமாக மத்திய அரசிடம் ரூபாய் 5000 கோடியை கேட்டு இருந்த நிலையில் சுமார் 450 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சுமார் 12000ரூபாயாக நிவாரண பணத்தை வழங்க கோரி இபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசிடம் நிவாரணம் பணத்தை வாங்கி தரும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டு வாங்கி தர வாரா ? என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பினார்