ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவதில் முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்று விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். ஆனால்.. எதுக்கு ஒற்றை தலைமை.. இரட்டை தலைமையே இருக்கட்டுமே என்று ஓ பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
தற்போது, அக்கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில், ஜூலை 11ல் அழைப்பு விடுத்துள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது.
இதற்காக ஈபிஎஸ் தரப்பு இடத்தேர்வு பணியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா காலம் முதலே அதிமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்தப்படுவது வழக்கம்.