கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, இன்று முதல் கடலைமிட்டாய்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு பெட்டியில் தலா 200கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் என ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும். இதற்கு 390 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.