Breaking News :

Friday, February 14
.

டீசல் ரயில் எஞ்சின் அணைக்கப்படுவதில்லை ஏன்?


ரயில் நிலையங்களில் அல்லது யார்டுகளில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு இருக்கும் டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை பலர் பார்த்திருக்கக்கூடும். இவ்வாறு ஓட விடுவதால், அதிக அளவில் எரிபொருள் இழப்பும், காற்று மாசு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகிறது. எனினும், அவை தொடர்ந்து ஐட்லிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

டீசல் ரயில் எஞ்சின்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோதிலும் அவை தொடர்ந்து ஓட விடுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. டீசல் ரயில் எஞ்சினை அணைத்து விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டி இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்கள் ஸ்பார்க் ப்ளக் மூலமாக வெளிப்புற இக்னிஷனை பெற்றிருப்பது போல் டீசல் ரயில் எஞ்சின்களில் வெளிப்புற எரியூட்டு அமைப்பு இல்லை. மேலும், 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத டீசல் ரயில் எஞ்சின்களை ஸ்டார்ட் செய்யும்போது தேவைப்படும் அதிகப்படியான வெப்பநிலையை பெறுவதற்கு திணறும். மேலும், குளிர்ச்சியான சமயங்களில் டீசல் ரயில் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னைகள் எழும் வாய்ப்பும் உண்டு. எனவே, ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, டீசல் ரயில் எஞ்சினை தொடர்ந்து ஓட விட்டு விடுகின்றனர்.

டீசல் ரயில் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக ஓட்டுனர் அட்டவணை நடைமுறைகளின்படி, ஒவ்வொரு பாகத்தையும் சோதித்து பின்னர் ஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கும். இதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் பிடிக்கும்.

டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், ரயிலின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தம் தரும் கம்ப்ரஷருக்கான ஆற்றல் எஞ்சினிலிருந்து பெறுவதுதான்.

ஒருவேளை, ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்தால், அனைத்து ரயில் பெட்டிகளின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தத்தை மீண்டும் ரயில் எஞ்சினிலிருந்து பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். இந்த நிலையில், டீசல் ரயில் எஞ்சின்களால் ஏற்படும் மாசு உமிழ்வு பிரச்னை மற்றும் எரிபொருள் இழப்பை தவிர்ப்பதற்காக இப்போது டீசல் ரயில் எஞ்சின்களில் APU என்ற துணை மின் வழங்கும் சாதனம் பொருத்தப்படுகிறது.

டீசல் ரயில் எஞ்சின்களை நீண்ட நேரம் ஐட்லிங்கில் நிற்கும்போது இந்த ஏபியூ சாதனம் மூலமாக, ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றலையும், பேட்டரி சார்ஜ் ஆவதற்கான மின்சாரத்தையும் வழங்கும்.

இந்த சாதனம் பொருத்தப்படும் போது ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு ஜெனரேட்டர் போன்ற 25 எச்பி பவர் கொண்ட சிறிய எஞ்சின்கள் மூலமாக பேட்டரி மற்றும் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றல் வழங்கப்படும். இதன்மூலமாக, ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை மிச்சப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயன்பாட்டில் இருக்கும் சில டீசல் ரயில் எஞ்சின்கள் தவிர்த்து, புதிதாக தயாரிக்கப்படும் டீசல் ரயில் எஞ்சின்களிலும் இந்த ஏபியூ சாதனம் பொருத்தப்படுகிறது. எனினும், வரும் காலத்தில் டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் முற்றிலும் மின்சார ரயில் எஞ்சின்களை பயன்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது.

ரயில் எஞ்ஜினை ஆஃப் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை பார்த்ததுப் போன்று, வாகன எஞ்சின்களில் ஆயில் ஏன் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை கீழே காணலாம்.

வாகன எஞ்சின்களில் ஏற்படும் உராய்வு, எஞ்சின் பாகங்கள் வெப்பமடைதல், பிசின் உருவாவது போன்றவற்றை தவிர்க்கவே வாகனங்களில் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் இயக்கத்தை போலவே, ஆயில் பயன்பாடு மற்றும் அதன் பராமரிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதில் ஒன்றுதான், மெல்லிய குச்சியின் மூலம் ஆயிலின் இருப்பை கணக்கிடுவது. ஆயிலின் டேங்கில் குச்சியை விடுவதற்கு முன்னதாக அதை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது முக்கியம்.

டேங்கிற்குள் குச்சியை விட்டு அதை வெளியே எடுத்து பார்க்கும் போது ஆயிலின் குறியீடு குச்சியின் மேல்புறத்தில் இருந்தால், பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் கரை அடிப்பாகத்தில் இருந்தால் டேங்கை ரீஃப்பில் செய்யவேண்டியது அவசியம்.

ரீஃப்பில் செய்யும் போதும் நாம் கவனிக்க வேண்டிய செயல்கள் உள்ளன. அதாவது ஆயிலின் பயன்பாடு வாகனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு தான் இருக்க வேண்டும். அதை மீறி ஓவர்ஃப்பில்லிங் செய்யப்பட்டால் வாகனத்தின் செயல்பாடு ஆட்டம் கண்டுவிடும்.

ஆயிலின் இருப்பு அதிகரித்தால், எஞ்சினுள் இருக்கும் கிராங்க்‌ஷாஃப்ட் ஆயிலால் நிரம்பிவிடும். தவிர எஞ்சின் சேம்பருக்குள் காற்று ஊடுருவவும் வாய்ப்புள்ளது. கிராங்ஷாஃப்ட் வேகமாக இயங்கும் போது காற்று + ஆயில் கலந்து அதனால் நுரை உருவாகும். நுரை உருவானால் அது எஞ்சினுக்குள் உராய்வை ஏற்படுத்தும்.

இப்படி நடக்கும் போது எஞ்சினுக்குள் வெப்பம் அதிகரிக்கும். இதை நாம் முன்பே கண்டறியாவிட்டால் எஞ்சின் லாக்காகிவிடும். பிறகு மொத்த வாகனத்தின் செயல்பாடும் அதோகதி தான். கம்பஷன் சேம்பருக்குள் ஆயிலின் அளவு அதிகரித்து அதனால் வெப்பம் உண்டாகி அதன் பிறகு அது நீராவியாக மாறி அதிலிருந்து புகையாக வெளியேறும்.

உங்களது வாகனம் அதிகப்படியான வெண்ணிற புகையை (நீலம் அல்லது சாம்பல் நிற கலைவையாக) வெளியேற்றினால், எஞ்சினுக்குள் ஆயிலின் அளவு அதிகரித்துள்ளது என்பது பொருள்.

இதுபோல வெண்ணிற புகை அதிகளவில் உங்களின் கார்களிலிருந்து வெளியேறினால், அதை நன்றாக கவனித்து உங்களது வாகன எஞ்சினை சிறிது நேரத்திற்கு இயக்கத்திலேயே வையுங்கள்.

எஞ்சின் கொஞ்சம் சூடான பிறகு, ஒரு குச்சியை டேங்கிற்குள் விட்டு ஆயிலின் இருப்பை சரிபாருங்கள். ஆயிலின் குறியீடு குச்சியின் மேற்புறத்தில் தெரிந்தால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அர்த்தம்.

ஆயிலின் அளவு அதிகரித்தால், அதை வெளியேற்றுவதற்கான மூடிக்கொண்ட வசதி எஞ்சினின் அடியில் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த தேவை பெரும்பாலான கார்களில் உள்ளது.

ஒருவேளை அந்த மூடி வலிமையாக இருந்து, திறக்க முடியவில்லை என்றால் ஸ்பேனர் மற்றும் சில டூல்களை பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் நல்ல பயனையே தரும்.

ஆயில் என்பது சற்று திரவ நிலையில் இருந்தாலும் அது திடமாக இருக்கும். தரையில் அது ஒழுகினால் அந்த கரை அவ்வளவு எளிதில் போகாது. இதன் காரணமாக எப்போதும் ஆயிலை வெளியேற்றும் போது, அது ஒழுகி வெளிவரும் இடத்தில் ஒரு பேன் அல்லது குவளையை வைத்து விடுங்கள்.

வாகனங்களில் ஆயிலின் தேவை இன்றியமையாதது. வாகனத்தின் தேவையை கருதிஎஞ்சின்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படும் தன்மையை கொண்டது. அதனால் அதை முறையாக பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களின் கடமை. இதை மனதில் வைத்து ஆயில் சார்ந்த செயல்பாடுகளில் எப்போது கவனம் கொள்வது அவசியம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.