துணை ஜனாதிபதி வருகை: பக்தர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை
இந்திய துணை ஜனாதிபதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இன்று காலை வருகை தருவதை முன்னிட்டு காலை முதல் கோயில் நான்கு சன்னதி வாயில்களிலும் பக்தர்களையும் மற்றும் பத்திரிக்கையாளர்களையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.
இதனால் அன்றாட பூஜையை காண செல்லும் சிவ பக்தர்கள் கோயில் செல்ல முடியாமல் அவதியுற்று திரும்பிச் சென்றனர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். போலீசாரின் கெடுபுடியால் பொதுமக்களும் பக்தர்களும் கடும் அவதியுற்றனர்.