உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி தான் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால் அடுத்த பரபரப்புக்காக துணை முதல்வர் பொறுப்பு என்ற வதந்தி பரப்புகின்றனர்.
'எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகவே உள்ளோம்' எனக் கூறி வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்து விட்டார் உதயநிதி.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமையையும், முழக்கத்தையும் திசை திருப்ப நினைக்கும் முயற்சிக்கு திமுகவினர் இடம் தரக்கூடாது.
எதிரிகள் தான் இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.