மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் – கிராம தொழில்முனைவோர் திட்டம் போன்றவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிர்ணயித்த இலக்கின்படி வங்கிக்கடன் இணைப்பை வழங்கி வருவது மற்றும் அவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கான பணிகள் குறித்து கேட்டறிந்தோம்.
மகளிரை பொருளாதார சுதந்திரம் மிக்கவர்களாக உருவாக்க, ‘மதி’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் மதி சந்தை, மதி உணவுக்கூடங்கள், மதி கஃபே, உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் நிலைகுறித்தும், இக்கூட்டத்தின் வாயிலாக ஆலோசனைகளை மேற்கொண்டோம்.
மேலும், புதிய அறிவிப்புகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினோம்.
#TNCDW #VKP #PradeepYadavIAS @GSBediIAS @DD_IAS @ShreyaSinghIAS @shreya_psingh