புதுடெல்லி:டெல்லியின் தென்மேற்கில் உள்ள நஜாப்கார் பகுதியில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கு சில வாடிக்கையாளர்கள் முடி அலங்காரம் செய்துகொள்ள வந்தனர்.அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.இந்த தாக்குதலில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைக்கண்டு மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர்.தகவலறிந்து வந்த போலீசார் இறந்த வாலிபர்களின் உடல்களை மீட்டனர்.
விசாரணையில், அவர்கள் சோனு மற்றும் ஆஷிஸ் எனவும், இருவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், வாலிபர்களுக்கு இடையிலான குழு மோதலில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.