உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. அதற்கு கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POSTம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை.
ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.
வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
வசதியை எப்படிப் பெறுவது
1) முதலில் Omdivyadarshan - Omdivyadarshan இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform
2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626
3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம்.
அதில் 'ஓம் திவ்ய தரிசனம்' என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும்.
4) இதற்குப் பிறகு, "ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா", சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.
நிறுவனம் பற்றி தொடர்பு கொள்ள பயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொள்க.
குறிப்பு: இது பற்றிய தகவல் எளிதாக கிடைப்பதில்லை. எனவே மற்றவர்களுடன் பகிர்ந்து புண்ணியம் தேடுங்கள்.
மேலும், இதை பயன்படுத்தியவர்கள் அனுபவத்தை கமெண்டில் பகிர்ந்தால் அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வசதியை இங்கிருக்கும் மின்மயானங்கள் மூலம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.