சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் அனைத்து வாகனங்களிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
சென்னை, பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இளைஞர்கள் கஞ்சா, போதை பொருட்கள், குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs). ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) உள்ளிட்ட பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் காவல் குழுவினரால் தீவிரமாக கண்காணித்து மேற்கண்ட சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் கண்டிறிந்து கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திரு.சிவபிரசாத், இ.கா.ப. அவர்கள் தலைமையிலான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சென்னை பெருநகர காவல் சார்பில் போதை பொருளை ஒழிக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் தயாரித்துள்ள ’’SAY NO TO DRUGS’’ என்ற வாசகத்துடன் கூடிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் துணை ஆணையாளர் திரு.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.12.2021) வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
#chennaipolice
#greaterchennaipolice
#chennaicitypolice
#shankarjiwalips