Breaking News :

Sunday, April 21
.

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மருத்துவர்கள் மூலமாக கவுன்சிலிங்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மருத்துவர்கள் மூலமாக கவுன்சிலிங் வழங்கப்பட இருப்பதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்செந்தூரில்  செய்தியாளர்களுக்கு   அவர்  அளித்த பேட்டி: 

 கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிஉள்ளதால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

மூன்று முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக ஊஞ்சல் என்ற இதழும், ஆறு முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக தேன்சிட்டு என்ற இதழும் வெளியிடப்பட உள்ளது. இந்த இதழில் மாணவர்களின் ஓவியங்கள், கவிதைகள் போன்ற படைப்புகள் வெளியிடபட்டு  அதன் மூலமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சில இடங்களில் மாணவர்கள் செய்யும் சில தவறான நடவடிக்கைகளுக்கு பெற்றோரின் பங்களிப்பும் காரணமாகிறது. எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க அந்தந்த பள்ளி மேலாண்மை குழு முடிவு எடுக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது. மாணவர்களுடைய தவறான போக்குகளை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அரசு வெளியிடும் .

தமிழகத்தில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக மத்திய அரசின் ஆர் பி எஸ் கே (RASHTRIYA BAL SWASTHYA KARYAKRAM)  திட்டத்தின் மூலமாக மருத்துவர்கள் மூலமாக மன நல ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார்.

 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.