சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை 20 நிமிடங்கள் வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் மருத்துவமனையில் இருந்த தனது அண்ணன் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.
துரை தயாநிதியை பொறுத்தவரை தனது சித்தப்பா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் எப்போதும் சுமூகமாக போக்கை கடைபிடித்தவர். தனது அப்பாவும், சித்தப்பாவும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக தாம் பேசாமல் இருந்ததில்லை.
உதயநிதி, சபரீசன் என எல்லோருடனும் கேசுவலாக பேசி பழகுவார். அதேபோல் முடிந்தவரை குடும்ப சொந்தபந்தங்கள் எல்லோரிடமும் உறவுமுறை பேணி வந்தவர் துரை தயாநிதி என்றாலும் இளம்வயசில் இப்படி பிரையின் ஸ்ட்ரோக் எனப்படும் மூளைப் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.