ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுகவின் வெற்றி வேட்பாளர் திரு. கே. இ. பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக குமாரபாளையம் தொகுதி, வெப்படை பகுதியில் பிரச்சாரம் செய்தேன்.
ஒவ்வொரு மாதம் சிலிண்டருக்குப் பணம் கொடுக்கும்போதும் மக்களின் வயிறு எரிகிறது, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீப் புகை குண்டுகளை வீசும்போது நமது கண்கள் எரிகின்றன, குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்து, கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவால் நம் இதயம் எரிகிறது. இந்தக் காயங்களுக்கெல்லாம் மருந்திடும் நாள் ஏப்ரல் 19.
பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், டெல்லிக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ அந்தச் செய்தியை வீரம் மிக்க ஈரோட்டு மக்கள் தேர்தல் நாளில் சொல்வார்கள்.