சென்னையின் புகழ் பெற்ற பல்வேறு பிரியாணி ஹோட்டல்களில் மட்டன் என்று நாய்கறியை தான் பல ஆண்டுகளாய் போட்டுள்ளனர். அதுவும் கடந்த சில ஆண்டுகளாய் பல கிளைகளை பரப்பிய புகழ்பெற்ற ஹோட்டலில் வெறும் நாய்கறி தான். அதுவும் தினசரி டன் கணக்கில் நாய்கறியை போட்டுள்ளனர். மருந்துக்கு கூட மறந்தும் மட்டன்கறியை போடுவதில்லை. கறிக்கடைகளில் கூட ஆட்டை வெளியில் தொங்க விட்டு உள்ள நாயை வெட்டி தான் தந்துள்ளனர்.
முக்கியமாக பல 5 ஸ்டார் ஹோட்டல்களும் நாய்க்கறி விவகாரத்தில் மாட்டியிருந்தன. இதற்காக ஒரு கும்பல் சென்னை சுற்று வட்டார பகுதியில் திரியும் தெருநாய்களை எல்லாம் பிடித்து கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சென்னையில் தெரு நாய் இனம் அழிய , அண்டை மாநிலங்களில் இருந்து தோல் மற்றும் தலை நீக்கப்பட்ட நாய்கறிகள் ரயிலில் வர ஆரம்பித்தன. விஷயம் வெளியில் தெரிந்ததும் தனியார் அமைப்புகள் , மீடியா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எலும்புகளை போட்டு அடக்கி விட்டனர்.
நாய் மட்டுமா? செத்த மாடு , பூனைக்கறி , சாலையில் அடிபட்ட சில உயிரினங்கள் , காக்கைகள் இவை எல்லாம் சென்னை உணவகங்களில் தாராளமாய் கிடைக்கும். சீனக்காரன் பரவாயில்லை. உயிரோடு அடிச்சி அது என்னனு தெரிஞ்சி தான் சாப்டுறான். நீங்க அப்படியா? மட்டன்னு உறிஞ்சுன உறிஞ்சு எல்லாம் நாய்க்கறி பூனைக்கறி தான் . சீனாக்காரன் மட்டுமல்ல இந்தியாவின் வட கிழக்கு மாநில மக்களும் நாய்கறி சாப்பிடுவார்கள். தேர்தல் காலங்களில் பாதுகாப்பிற்கு நாகாலாந்து படைகளை தமிழகத்தில் இறக்குவார்கள். அந்த சில நாட்களில் தெருவில் நாய்கள் காணாமல் போகும் . நாய்கறி பிரியர்கள் அவர்கள். நாய் மட்டுமல்லாது தவளை , புழு , பூச்சி என சீனர்கள் சாப்பிடும் அனைத்தையும் சாப்பிடுபவர்கள். கோழிக்கறியை விட அங்கு தவளைக்கறி விலை அதிகம். ஆட்டை விட அங்கு நாயின் விலை அதிகம். மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக உள்ள பல நாடுகளில் நாய்க்கறி புழக்கம் உண்டு..
பெரும்பாலான மாவட்டங்களில் காலையில் ஆடு உறிக்கும் நேரத்திலே கறிக்கடைக்கு சென்று விடுவார்கள். நான் எல்லாம் ஆடு தோலை பார்த்த பிறகே கறி வாங்குவேன். கோழியும் புதுசாக வெட்டி தான் வாங்குவது. கொங்கு பகுதிகளில் ஹோட்டல்களில் அவ்வப்போது ஆட்டுக்கறியோடு மாட்டுக்கறியை கலப்பது வாடிக்கை.