இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே, திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரவுபதி முர்முக்குஎனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்புமிகுந்த அரசியலமைப்பின்பாற்பட்ட மக்களாட்சியை உறுதிசெய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.