சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவில் இருந்தே கனமழை பெய்துவரும் நிலையில், அதனை எதிர்கொள்ள தொடர்ச்சியாக அனைத்து வகையிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று காலையில் இருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அமைச்சர்கள், நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அண்டை மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக விரிவான ஆய்வுக் கூட்டத்தை @chennaicorp அலுவலகத்திலிருந்து நடத்தினோம்.
கன மழையை எதிர்கொள்கிற வகையில், அந்தந்தப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் - மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்யும் நடவடிக்கைகள் - தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லுதல் - அத்தியாவசிய பொருட்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவைக் குறித்து இந்தக்கூட்டத்தின் போது விரிவாக ஆலோசித்தோம்.
பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில், விழிப்புடன் செயல்பட்டு மக்களை காப்போம் என அறிவுறுத்தினோம்.
@KN_NEHRU @PKSekarbabu @PriyarajanDMK @MMageshkumaar