சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் வரும் 24ம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 12 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.