Breaking News :

Friday, October 04
.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்


பரமாரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.  

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வியாழக்கிழமை), ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.