Breaking News :

Saturday, January 18
.

பாரத பிரதமர் பற்றி அவதூறு பரப்புவது முதல்வர் பதவிக்கு அழகல்ல: மத்திய அமைச்சர் எல். முருகன்


ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது MK.ஸ்டாலின் அற்ப அரசியலை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

ஒடிசா மாநில அரசியலில் முதல்வர் நவீன் பட்நாயக்கை விட பலம் வாய்ந்த மையமாக வளம் வரும் ஓய்வு பெற்ற IAS அதிகாரி வி.கே.பாண்டியனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பேசும் பொழுது பிரதமர் கூறிய வார்த்தைகளை ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கு எதிராக பிரதமர் பேசியதாக கூறுவது முற்றிலும் தவறான அரசியல் வழியாகும்.

ஒடிசா முதல்வர் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் தனி செயலாளராக 12 ஆண்டுகள் IAS அதிகாரி வி.கே.பாண்டியன் மெல்ல மெல்ல ஒடிசா மாநில அரசியலில் தலையிட்டு இன்று ஒடிசாவின் முதல்வர்,  அமைச்சர்கள், அதிகாரிகளை தன் மனம் போன போக்கில் ஆட்டுவிக்கும் அளவிற்கு மாறியுள்ளார்.

 ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூலம் மிகவும் மதிப்பு மிக்கது. பல்லாண்டுகளாக அரசர்கள், மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூரி ஜெகநாதருக்கு அளித்த பொன், பொருள், ஆபரணங்கள், மதிப்பு மிக்க பொருட்கள் அடங்கிய கருவூலத்தை சில குறிப்பிட்ட தருணத்தில் தான் திறப்பார்கள்.

2018 இல் கோயில் கருவூலத்தை திறக்க ஒடிசா உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது அப்போதுதான் அந்த சாவியை அரசு தொலைத்து விட்டதாக தகவல் வெளிவந்தது.

சாவியை தேட விசாரணை கமிஷன் அமைத்து ஆறு ஆண்டுகள் ஆகியும் ஒடிசா அரசால் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில் தான் ஒடிசாவின் பெருமையும், பொக்கிஷமுமான பூரி ஜெகனாதர் கருவூல சாவியை  விரைவில் மீட்டெடுப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்களுக்கான அரசியலை பாஜக அங்கே முன்னெடுத்து வருகிறது. அந்த சாவியை மீட்கும் நோக்கத்தில் தான் மக்களின் செல்வதை களவாடி வரும் நவீன் பட்நாயக் அரசின் அதிகார மையமாக விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி வி.கே.பாண்டியனை குறிக்கும் விதத்தில் பிரதமர் பேசியதை ஏதோ தமிழர்களுக்கு எதிராக பேசியதாக மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவது நாகரீகம் அற்ற செயல் ஆகும்.

தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அதிக அன்பை கொண்டுள்ள பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அனைத்து நிலையிலும் தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாட்டிற்கு ஆதரவாகவே செயல்பட்டு உள்ளார்.

ஆகவே அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பும் செயலை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.