கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 68 நாட்களாகியும், அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து, ஒவ்வொரு நாளும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கோயிலைக் காண மக்கள் பெரும் வாரியாக வந்தவண்ணம் உள்ளனர். 03-03-2024 அன்று 10000க்கும் மேலான மக்களுக்கு சமபந்தி விருந்து (சிக்கன் பிரியாணி) அளிக்கப்பட்டது.
கடந்த ஏழு நாட்களாகவே தலைவாழை இலை போட்டு, காலை இட்லி வடை, பொங்கல் சட்னி, கேசரி, நண்பகல் சைவம் மற்றும் அசைவ வகையான உணவுகள் மற்றும் மாலை வெண்பொங்கல், கிச்சடி, சர்க்கரை பொங்கல் என மூன்று வேளையும், டேபிள் மற்றும் சேர் போட்டுக் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கோயிலைக் காண வரும் அனைவருக்கும் சமபந்தி விருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.