2019 குடியுரிமைத் திருத்த சட்டத்தில், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் குடியுரிமை வழங்கப்படும்.
2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது.
இலங்கைத் தமிழர்கள், மியான்மர் அகதிகளுக்கு இது பொருந்தாது.