ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை என தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும் என்றார்.
மேலும் கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏராளமான வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல. எல்லா வலிகளையும் அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே; அப்படித்தான் நான் செயல்படுகிறேன். தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது; நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார். ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.