Breaking News :

Friday, October 04
.

அதிர்ச்சி: தாய் மரணம் அடைந்து 117 நாட்கள் கழிந்து பிறந்த குழந்தை?


கர்ப்பிணி பெண் ஒருவர் மரணம் அடைந்து 117 நாட்கள் கழித்து அவரது வயிற்றில் உள்ள குழந்தை பிறந்த அதிசய நிகழ்வு ஒன்று செக் குடியரசு நாட்டில் 2020ல் நடந்துள்ளது.

செக் குடியரசு நாட்டில் 15 வார கர்ப்பமாக இருந்த 27 வயது பெண் ஒருவர் திடீரென மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது வயிற்றில் உள்ள சிசுவை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அந்த வகையில், பல்வேறு செயற்கை உபகரணங்களுடன் இறந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகப்பிரசவத்திற்கு உதவும் வகையில், எந்திர வசதிகள் கொண்டு அப்பெண்ணின் கால்களுக்கு நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதேபோல் மருத்துவர்களின் கண்காணிப்பில் சுமார் 117 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் 2.13 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை அப்பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டதால் அவர் மீண்டும் மரணம் அடைந்தார்.

தாய் இறந்து 117 நாட்கள் குழந்தை பிறந்த அதிசயம் செக் குடியரசு நாட்டையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.