தைவானில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிர்ரொலியாக ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 8 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் சுனாமி எச்சரிக்கை விடுத்து கடலோரப் பகுதிகளை காலி செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 34.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தைவானின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கம் "25 ஆண்டுகளில் இல்லாத வலிமையானது" என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் கூறினார். "நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது மற்றும் அது ஆழமற்றது. இது தைவான் மற்றும் கடல் தீவுகளில் உணரப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு வூ சியன்-ஃபூ செய்தியாளர்களிடம் கூறினார்.
குறைந்த மக்கள் தொகை கொண்ட ஹுவாலியனில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் பெரிதும் சேதமடைந்தது, அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது, மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்களிலிருந்தும், சில புதிய அலுவலக வளாகங்களிலிருந்தும் ஓடுகள் விழுந்தன.