2023 முதல் 2027 வரையிலான 5 சீசன்களுக்கான ஐ.பி.எல் போட்டிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் முடிந்திருக்கிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் 23,575 கோடி ரூபாய்க்கும்,
டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் 20,500 கோடி ரூபாய்க்கும் ஏலம் போயிருக்கிறது.
இரண்டையும் சேர்த்து மொத்த மதிப்பு 44,075 கோடி ரூபாய்.
நான்கு விதமான உரிமங்களுக்கு பிசிசிஐ ஏலம் நடத்திக் கொண்டிருக்கிறது. மொத்தமாக சேர்த்தே ஒரு 45000 கோடி வரை ஏலம் போகலாம் என பிசிசிஐ எதிர்பார்த்தது. ஆனால், இன்னும் இரண்டு விதமான உரிமங்களின் ஏலம் தொடங்கப்படாத நிலையிலேயே 44000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.
தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டம் உரிமம் இரண்டையும் இரண்டு வெவ்வெறு நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.
கடந்த 5 சீசன்களாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் என தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு இரண்டையுமே ஒரே நிறுவனத்துடைய சேவையில் கண்டுகளித்திருப்போம்.
இனி அப்படி இருக்கப்போவதில்லை!
உரிமங்களை எந்த நிறுவனங்கள் வாங்கியிருக்கிறது என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் ஏலம் முடிந்தபிறகே வெளியாகக்கூடும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிலேயே ஐ.பி.எல் ஐ பார்க்கப்போகிறோமா அல்லது சேனலை மாற்ற வேண்டுமா என்பதை சில மணி நேரங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.