தமிழ்நாடு அரசின் எக்ஸ் ஹெல்த் செகரட்டிரி போஸ்டிங்கில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளதாக பத்திரிகைகளில் அறிவிப்பு அளித்துள்ளார்.
தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார்.
கொரோனா காலத்தில் பீலா ராஜேஷ் பணி பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பரில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ், எரிசக்திதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றி உள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார். இதேபோல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பீலா என்று மட்டுமே வைத்துள்ளார்.
திடீரென இப்படி பெயரை மாற்றியது ஏன் என்பத் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.