வாழை இலையில் சாப்பிடுறது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக் கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுதவிர, இதில் சாப்பிடுறதால உடம்புக்கும் ரொம்ப நல்லது. இப்பலாம் க்ரீன் டீ குடிக்குறது ஃபேஷனாகிடுச்சு.
க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிகமா இருக்கு. . இது, பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுது. இன்னிக்கு அதிகமா பரவிவரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் வாழை இலை நம்மை காக்குது. வாழை இலையை அப்படியேவும் சாப்பிடமுடியாது,
சமைக்கவும் முடியாது.
அதனால்தான் வாழையிலையில் வச்சு கொழுக்கட்டை, மீன் மாதிரியான சில உணவுகள் செய்யப்படுது. வாழையிலையில் சமையல் செய்வது எல்லா இடத்துலயும் வழக்கமில்லாததால் சாப்பிட ஏற்பாடு செஞ்சாங்க. வாழை இலையில் சூடா சாப்பாடு, பதார்த்தம்லாம் பரிமாறும்போது அந்த சூட்டில் பாலிபினால்ஸ்கள் இளகி சாப்பாட்டில் சேரும். இதில் ஆன்டிஆக்சிடண்ட் அதிகமா இருக்குறதால நோய் தடுப்பாகவும், சரும பாதுகாப்பிற்கும் பயன்படுது.
வாழை இலையிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்தும்.
ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வாழை இலை இயற்கையாவே உருவான கிருமி நாசினி, இதில் சாப்பிடும்போது சாப்பாட்டிலிருக்கு நச்சுத்தன்மையை போக்குவதுடன் நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
வாழை இலையில் உணவை பரிமாறும்விதத்தை பத்தியும் சொல்லி இருக்காங்க.
சாப்பிடுறவங்களுக்கு தலைவாழை இலைன்னா வாழை இலையின் நுனிப்பகுதி இடப்பக்கமாவும், அகலமான காம்புப்பகுதி வலப்பக்கமாவும் வரனும். பாதியில் கிழிச்ச ஏடுன்னா தண்டுப்பகுதி நம்ம சாப்பிடுறவங்க பக்கம் வரனும். இந்த அமைப்பு எதுக்குன்னா, உடம்புக்கு கெடுதல் செய்யும் உப்பு, இனிப்பு, ஊறுகாய்லாம் கொஞ்சமா பரிமாறவே. குறுகிய இடத்தில் கொஞ்சமாதானே வைக்கமுடியும்?!
அடுத்து பச்சடி,பொரியல், அவியல், கூட்டுன்னு இருக்கனும். அகலமான அப்பளமும், நீளமான வாழைப்பழமும் வைக்க இடம் வேணுமே. அதுக்குதான் இலையில் விரிஞ்ச பக்கம். முதல்ல சோறு, பின் பருப்பு நெய்.. சாம்பார், காரக்குழம்பு/மோர்க்குழம்பு, ரசம், மோர்.. இப்படித்தான் உணவை பரிமாறனும். வாழை இலையில் கூட்டு, பொரியல், அப்பளம், இனிப்புன்னு எதுமே இல்லாம வெறும் இலையில் சோறை போடக்கூடாது. அது கெட்டதுக்கான அறிகுறி.
சாப்பிட்டபின் இலையை தன் பக்கமா மடிக்கனும். அப்படி மடிக்குறது சாப்பாட் நல்லா இருந்துச்சுன்னு சொல்லவும், உறவை நீட்டிக்க ஆசைன்னும் அர்த்தம், இலையை வெளிப்பக்கமா மடிச்சா சாப்பாடு நல்லா இல்லைன்னும், உறவை தொடர விருப்பமில்லைன்னு சூசகமா சொல்லும் முறை.