அயோத்தியில் ராமர்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
ராமர் கோயில் முற்றிலும் நம் நாட்டின் பாரம்பரிய தொழிற்நுட்ப கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை.
நீளம்380 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடியில் கோயில் அமைப்பு பிரம்மாண்டமாவும், சுற்றுச்சூழல், நீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளன.
நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடி கொண்ட கோயில் பிரதான கருவறையில் ராமர் சிலை, முதல் தளத்தில் ராமர் தர்பார் அமைப்பட்டுள்ளது.
கோயில் சூர்ய பகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவப் பெருமான் என 4 மூலையிலும் தனித்தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு பகுதியில் அன்னபூரணி கோயில், தெற்கு பகுதியில் ஹனுமன் கோயிலும் நிறுவப்பட்டுள்ளன.
மகரிஷிகள், வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரா, அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி ஆகியோருக்கும் சன்னதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோயிலின் ஒவ்வொரு தூண், சுவரிலும் சுவாமி சிலைகள் அமைப்பு, 5 மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன
பக்தர்கள் 25 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழங்காலத்து கிணறு, ஜடாயு சிலை, சிவன் கோயில் ஆகிய மீட்டெடுக்கப்பட்டு, இங்கே வைக்கப்பட்டுள்ளன.