Breaking News :

Sunday, February 25
.

அயோத்தியில் ராமர் கோயில் வரலாறு தெரியுமா?


இன்றைய உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் கலியுகம் 3002 ஆம் ஆண்டில் அவந்தி நாட்டு அரசனான விக்கிரமாதித்தயாரால் ஸ்ரீராமரின் கோயில் சிறப்பாக கட்டப்பட்டது.

முகலாய படையெடுப்பின் போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டு அவற்றில் பல ஆயிரம் கோயில்கள் மசூதிகள் ஆக மாற்றப்பட்டதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

 16 ஆம் நூற்றாண்டில் பாபர் இந்த நாட்டின் மீது படையெடுத்து செல்வங்களை கொள்ளை எடுத்துச் சென்ற போது அவனுடைய படைத்தளபதி மீர்பாகி இடம் அயோத்தி மீது போர் தொடுக்கும் பொறுப்பினை வழங்கினான்.

 1528 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்துக்கள் பாபரின் படையிடம் தோற்றனர் ..அத்தருணத்தில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தடுத்தும் அதையும் மீறி அவர்களை கொன்று.. குவித்துவிட்டு பாபரின் உத்தரவுப்படி பக்தர்களின் உயிரின் மேலான ஸ்ரீராமரின் கோயில் தகர்க்கப்பட்டது.

முழுமையாக எடுத்துவிட்டு மீண்டும் கட்டுவதற்கு திறனும் காலமும் இல்லாத காரணத்தினால் கோயிலை முழுமையாக இடிக்காமல் சுற்றுச் சுவர்களும் சிற்பங்களும் அப்படியே இருக்க கோயில் சுவற்றின் மீது மசூதி போன்ற கட்டடம் எழுப்பப்பட்டது.

விக்கிரங்கள் உடைக்கப்பட்டு படிக்கட்டுகளாக மாற்றப்பட்டன. வென்ற எல்லா இடங்களிலும் மசூதி கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.. இதற்கு ஆதாரமாக பாபர் நாமா என்னும் பாபரின் தினசரி நகல் குறிப்பில் சரியாக ஆயிரத்து 528 ஏப்ரல் 2 முதல் செப்டம்பர் 18 வரை ஐந்து மாதங்கள் வரை குறிப்புகள் ஒரு காலத்தில் காணாமல் போய்விட்டன.

இதன் பிறகு கோயிலை மீட்பதற்காக பல போராட்டங்கள் நிகழ்ந்தது வரலாறு ...சிலர் 76 முறை என்றும் கூறுகின்றனர் பாபரை எதிர்த்து 4. ஹுயுமானை எதிர்த்து 10 ..அக்பரை எதிர்த்து 20. அவுரங்கசீப் ஐ எதிர்த்து 30 நவாப் ஹதர் அலியை எதிர்த்து 5 நவாசுதீன் ஹைதர் எதிர்த்து 3 ஆங்கிலேயரை எதிர்த்து 2.இத்தகவலை உறுதி செய்ய முடியாவிட்டாலும் பல போராட்டங்கள் நிச்சயம் நிகழ்ந்துள்ளன.

ஒரு சமாதான ஏற்பாடாக 1883இல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு ராம் சபூதரா என்ற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப்பட்டது.

1885இல் மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ராமர் அவதரித்த இடத்திலிருந்து கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டப்பட்டுள்ளது என்றும் அந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி f.e.a.கௌமியர் இந்துக்களுக்குச் சொந்தமான புண்ணிய பூமியின் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது.. ஆயினும் இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம்.. இதனை சரி செய்வதற்கான காலம் கடந்துவிட்டது என்று தீர்ப்பளித்தார்.

பல்வேறு கலவரங்கள் மற்றும் தாக்குதலால் சேதமடைந்த மசூதி 1934 ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டது. தொழுகையும் நடைபெறவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தைப் போன்று அரசே முன்னின்று ராம ஜென்மபூமி கோயிலை மீட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்... சோதா காங்கிரஸ்.

1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் உள்ளூர் இந்துக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ராம்சபூதரார பகுதியில் இருந்து சீதா ராம லட்சுமண விக்கிரகங்களை மசூதியின் மையப்பகுதியில் நிறுவியுள்ளனர்.

டிசம்பர் 29 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு. நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு .இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வெளியே நின்று ராமரை இந்துக்கள் வழிபடும் பூஜைகள் செய்யவும் .ஒரே ஒரு பூஜாரி மசூதிகள் அனுமதிக்கவும். வழிசெய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

1986இல் மசூதியில் கதவுகள் திறக்கப்பட்டு இந்துக்கள் உள்ளே சென்று வழிபடுவதற்கு உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1992 டிசம்பர் 6 அன்று ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் 464 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் பாழடைந்த கட்டடம் வெற்றிகரமாக தரைமட்டமாக்கப்பட்டது.

2010 செப்டம்பர் 30 அன்று பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன்பாக கோயில் இருந்ததற்கான எந்த சான்றுகளையும் உறுதிப்படுத்திய நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப் பகுதியை மூன்றாக பிரித்து மூன்று மனுதாரர்களுக்கு சமமாக வழங்கியது....
தீர்ப்பில் திருப்தி அடையாத மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதன் தீர்ப்பு ராமருக்கு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இயேசு பிறந்த பெத்தலகேம் நபிகள் பிறந்த மெக்கா என பல்வேறு மதத்தவரின் முக்கிய இடங்கள் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருவது போல ராமர் பிறந்த அயோத்தி என்று அவர் பிறந்த இடத்தில் அவருக்கான ஒரு அருமையான கோயில் விரைவில் திரு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டிமுடிக்கப்பட்டு ஜனவரியில் 22ல் கும்பாபிஷேகம்  செய்து திறக்கப்பட உள்ளது.

சும்மா கிடைக்கவில்லை நம் ராமர் பிறந்த இடம்.
வாய்ப்பு கிடைக்கும்போது நாம் வாழ்க்கையில் ஒரு நாளேனும் ராமர் கோவிலுக்கு சென்று வருவோம் என்பதை நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
jaishriram
ayodhya
rammandir

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.