Breaking News :

Thursday, April 18
.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் - காவல் அதிகாரிகள்


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பேருந்தின் படியில் பயணம் செய்வதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். 

பேருந்தின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, சென்னை, பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (21.12.2021) சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று, மாணவர்களுக்கு பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர்.

சென்னை பெருநகரிலுள்ள மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், தி.நகர், அடையாறு, புனித தோமையர்மலை, புளியந்தோப்பு, அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், இன்று (21.12.2021) தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர்.

பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்வதும், ஓடிச் சென்று ஏறுவது போல சாகசங்கள் செய்வதும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், இவ்வாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வதால், விபத்து ஏற்பட்டு, கை, கால் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படும் எனவும், இந்தியாவின் எதிர்கால தலைமுறையாகிய மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, முன்னேற வேண்டும் எனவும் காவல் குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மாணவர்களாகிய நீங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, தம்மையும், தமது குடும்பத்தையும், தமது நாட்டையும் உயர்த்த வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. காவல் குழுவினரின் அறிவுரைகளை ஏற்று, பேருந்தின் படியில் பயணம் செய்யாமல், படிப்பில் கவனம் செலுத்தி, நல்ல பழக்கங்களை கடைபிடிப்பதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.