இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய். இரண்டு முறை பிரதமராக அரியணை ஏறிய அவரால் முழுமையாக 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்யவில்லை. நாட்டின் பிரதமராக 1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற போது அவரது பதவி காலம் வெறும் 13 நாட்களே நீடித்தது.
மீண்டும் 1998-ல் பிரதமரான போது அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. தோல்விகளில் இருந்து பாடம் கற்ற வாய்பாய் 1999 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் இந்த முறை முழுமையாக 5 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்தார்
தங்க நாற்கர திட்டம்" டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை இந்த நான்கு முக்கிய மாநகரங்களை இணைப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டது. இந்த நான்கு முக்கிய நகரங்களும், வெவ்வேறு திசையில் அமைந்து உள்ளது. அதன்படி, வடக்கே - டெல்லி, தெற்கே - சென்னை, கிழக்கே- கொல்கத்தா மேற்கே - மும்பை என இருக்கும் இந்த நன்கு நகரங்களை இணைக்கும் பொருட்டு இதற்கு தங்க நாற்கர சாலை என பெயரிடப்பட்டு இருந்தது
இந்தியாவின் முதுகெலும்பு நான்கு வழி சாலை தான் அந்த பெருமைக்கு சொந்தக் காரர் வாஜ்பாய் தான். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் வாஜ்பாய் நட்பு பாராட்டினார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றவர், அடல் பிகாரி வாஜ்பாய்