டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம் ஆத்மி கட்சி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சி, தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் திரு வசீகரன் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தார்.