Breaking News :

Monday, September 16
.

ஆண்டு விழா வாசிப்பு போட்டி


புத்தகம்:பாரதி நினைவுகள்
ஆசிரியர்:யதுகிரி அம்மாள்
இன்று 11__09 பாரதியின் நினைவு நாள்
கல்லூரி நாட்களில் எல்லாம் 
பாரதி பிறந்த நாளும், நினைவுநாளும் பேச்சுப்போட்டிகளும் 
தூள் பறக்கும். 
வ .உ.சியும்,பாரதி தானும் ,
மனைவி செல்லம்மாளும் 
மகள் தங்கம்மாளும் தத்தம் 
கோணங்களில் பாரதியை 
பகிர்ந்துள்ளனர் 
இந்த நூல் ஆசிரியை பாரதி
குடும்பம் புதுவையில் வசித்தபோது,அவர்களுடன் 
நெருங்கி பழகியவர். 
1912__1918வரை உள்ள 
கால கட்டத்திற்கான நினைவலைகளை த்தருகிறார். இந்த ஆசிரியை 
யதுகிரி அம்மா ள்,பாரதியின் 
குடும்ப நண்பரும்,"இந்தியா "
பத்திரிக்கைக்கு பொருளுதவி செய்தவருமான
ஸ்ரீநிவாசன் அவர்களின் மூத்த புதல்வி. 
இப்புத்தகம் அச்சேறி ஏறத்தாழ 75 ஆண்டு காலம் 
ஆயிற்று. 
இப்போது கிண்டி லில் உள்ளது.
1904ல் சேதுசமுத்திர ஆசிரியராக சென்னையில்
வசிக்கிறார்.அப்போதே "இந்தியா" பத்திரிகையிற்கும் 
ஆசிரியர் ஆக இருக்கிறார்
திலகரை தலைவராக கொண்டு,பாரதி, வ.உ.சி 
மண்மயம் ஸ்ரீநிவாசன்,,
எஸ் துரைசாமி ஐயர், 
ஆகியோர்,,அனல்பறக்கும் 
கட்டுரைகளும்,கேலிசித்திரங்களுமாக பிரிட்டிஷாரும்,அவர்கள் கைத்தடிகளும் வெட்கி
தலைகுனியும்படியும் இருந்தன .
விடுவார்களா ஆட்சியாளர்கள். "இந்தியா"
ஆசிரியரை கைது பண்ண 
வருகிறார் கள்.
பாரதி எப்படியோ தப்பிக்க ,
இன்னொரு ஆசிரியர் எம்.
சீனிவாசன் என்பார் கைதாகி 
தண்டனையும் பெற்றார். 

பாரதி யின் கழுத்துக்கு மேல் 
கத்தி இருந்ததால்  ,அவர் 
சென்னையில் இருந்து 
பாண்டிச்சேரி க்கு செல்கிறார். 
அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிவாசச்சாரியும் புதுவை 
செல்ல, புதுவையில் இருந்து 
"இந்தியா "அச்சகம் செயல்படத்தொடங்கியது. 
பிரஞ்சு அரசாங்கம்மாதலால் 
கெடுபிடிகள் குறைவாக இருந்தன.
யதுகிரி அம்மா குடும்பமும் 
பாரதி குடும்பமும் கடற்கரைக்கு செல்லும் போது 
பாரதி ரசித்த மீனவபாடலை 
நினைவு கூர்கிறார். 
பாரதி மனைவி  செல்லம்மாளும் பேச்சு துணையாக இருப்பார் என்று  ஆசிரியர்  குறிப்பிடுகிறார். 
செல்லம்மா " சுதேசமுத்திரனுக்கு அனுப்ப 
வேண்டிய கட்டுரை யை இவர்
எழுதவேஇல்லை. பேப்பர் பேனா மைக்கூடு எல்லாவற்றையும் எடுத்து டேபிளில் வைத்தாயிற்று. 
எழுதி அனுப்பினால் தானே 
அவர்கள் பணம் தருவார்கள் 
பால் காரனுக்கு பாக்கி 
பணம் தராது வீட்டில் வேலையாள் நின்று விட்டாள்.
பகவான் ஏனோ குழந்தைகளைக்கொடுத்து 
சோதிக்கிறார்.
பொருக்கி வைத்த அரிசியை 
குருவிகளுக்கு போட்டு குதூகலிக்கிறார்.
என்னையும் கூப்பிட்டு காண்பிக்கிறார். வெளியில் 
சென்றிருக்கும் குழந்தை கள் 
வருவதற்குள் சமைக்க வேண்டும். " என்று புலம்பினார் என்று ஆசிரியர் 
குறிப்பிடுகிறார். 
பெரிய ஆளுமைகளின் 
மனைவிமார்களை கேட்டாள்,
அவர்கள் நித்யவாழ்க்கை 
எத்தனை சோகமானது 
என்று  தெரியும். 
பாரதியின் வறுமை நமக்கு 
எல்லாம் தெரியும் என்றாலும் 
அதை செல்லம்மாவின் 
புலம்பலாக கேட்கும் போது 
மனதை பிசைகிறது. 
மார்க்சிய கோட்பாடுகளை 
உருவாக்கிய மார்க்ஸும் 
வறுமையில் உழன்றார். 
200ஆண்டுகளாக பல்வேறு 
நாடுகளிலும்,பல்வேறு இன
மக்களும் மார்க்சிய கோட்பாடுகளை பின்பற்றிய 
போதும், வாழ்ந்த போது 
ஜென்னிக்கும் நான்கு 
குழந்தைகளுக்கும் பசித்திருக்கும் அல்லவா 
ஒரு குழந்தை பசியால் இறக்க,ஜென்னி"நீ பிறந்த போது பால் வாங்க பணம் இல்லை.இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் பணம் 
இல்லை " என்று புலம்புதல் 
கல் நெஞசையும் கரையச்
செய்யக்கூடியது. 
பாரதி, 
காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணிநிலம் 
வேண்டும் அங்கு 
தூணில்அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்அந்த 
காணி நிலத்தினூடே ஒரு 
மாளிகை கட்டிதர வேண்டும் 
அங்கு 
கேணியருகினிலே தென்னைமரம்
கீற்று ம் இளநீரும் " என்று 
ஒரு பட்டியல் கொடுத்து விட்டு 
"இதை அரளுவதில் உனக்கு 
தடைஏதும் உளதா"என
பராசக்தியைக்கேட்டு கற்பனை யில் உலாவலாம். 
ஆனாலும் குழந்தைகளுக்கு 
பசிக்கும் அல்லவா 
வாசுகி

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.