அன்னை தெரசா 1910 ஆகஸ்டு 26-ல்அல்பேனியாவில் பிறந்தார். இயற்பெயர் கோன்ஜா போஜாஜியூ. 12 வயதில் முதன்முதலில் தனக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பதை உள்ளூர உணர்ந்தார்.
சமூக சேவைக்கு தன்னை அர்ப்பணிப்பதே உண்மையான ஆன்மிகம் என்றது அவரது உள்ளுணர்வு. 1929-ல் கொல்கத்தா வந்தவர் 17 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்றினார்.
1950-ம்ஆண்டு முதல் பாலின நோய், தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாடியவர்களுக்கு சேவை புரிய கொல்கத்தாவில் பல அமைப்புகளை தோற்றுவித்து செயலாற்றினார்.
அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா விருது, பல கவுரவ டாக்டர் பட்டங்களை அன்னை தெரசாவுக்கு வழங்கி உலக நாடுகள் தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டன.