அமெரிக்க நாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரே ஒரு நிமிடம் மின்னொளியைத் தடை படுத்துவார்களாம். ஏன் தெரியுமா ? அந்த மின் ஒளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தவரை நினைத்துப் பார்க்க வேண்டும் மக்கள் என்பதற்காக.
அவர்தான், மரியாதைக்குரிய தாமஸ் அல்வா எடிசன் அவர்கள். தலைச் சிறந்த விஞ்ஞானி. ஏறத்தாழ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்து, மனித சமூகத்திற்கு உதவியதற்காக..,
முற்போக்கான தியாக சிந்தனை அவர் வாழ்வில் ஓய்வின்றி ஆராய்ச்சி செய்து பல பொருட்களைக் கண்டு பிடித்திருக்கிறார்..
சினிமா, கிராமபோன், ஒலிபெருக்கி, அரிக்கேன் விளக்குகள் தொடங்கி மின்சார விளக்குகள் வரை பல்வேறு பட்ட கண்டு பிடிப்புக் கருவிகள் முழுவதும் அவர் தம் படைப்புகள் தான்.
இரயில் நடை மேடைகளில் செய்தித்தாள்கள் விற்பவராகத்தான் தமது வாழ்க்கையைத் துவங்கி இருக்கிறார் ஆல்வா எடிசன் . சமூக மேம்பாட்டுக்காக அவரின் சாதனைகளை நினைத்துப் பாருங்கள் மக்களே என, ஒரு நிமிடம் மின் தடையை ஏற்படுத்தி, எடிசனை அடையாளம் காணச் செய்தது அமெரிக்க அரசு...
இந்த ஒரு நிமிடம் மின் விளக்குகளை அணைத்து இருளில் இருக்கச் செய்ததின் மூலம் பல கோடி டாலர்களை இழக்கிறது அந்த அரசாங்கம்..
பரவாயில்லை, பல கோடி டாலர்களை இழந்தாலும், ஆல்வா எடிசன் இல்லை என்றால் நாம் இருளில்தான் தட்டுத் தடுமாறி தடத்தை, இடம் மாறிப் புழங்கி இருப்போம் என்கிற நன்நோக்கம் காரணமாக, நினைத்துப் பார்க்கச் செய்திருக்கிறது.
ஒரு நிமிடம் மின் தடையை ஏற்படுத்தியதற்கே பல கோடி டாலர்கள் இழப்பு என்றால் நாம் எத்தனை மணி நேரம் மின் தடையால் தட்டுத் தடுமாறுகிறோம் என்பதையும் நாமும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாம் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் மின் பயனாற்றில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை, என்பதை நினைக்கிற போது, வருத்தப்பட மட்டுமே முடிகிறது.